தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆளுநரை யாரும் கரைபடுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது ஆளுநரின் பதிவுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது.
தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) January 16, 2024
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை… pic.twitter.com/wUuvMJ4q63
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.