"பிளாஸ்டிக் பைகளை விடுத்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin

பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

stalin

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு இந்நாளில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் என வரிசையாக வருவதால் இந்நாளை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத்தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும்.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கிணங்க தை மாதம் பிறந்தாலே தமிழர்க்கு தனி உற்சாகமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். 

m.k.stalin

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!  கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.