சர்வதேச புலிகள் தினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
mk Stalin biopic

சர்வதேச புலிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது . கடந்த இரண்டு நூறு ஆண்டுகளில் உலகில் புலிகள் ஒன்பது வகையான இடங்களாக இருந்துள்ளன . இதில் மூன்று இனங்கள் முற்றிலுமாக அழிந்து விட்ட நிலையில் புலிகளை பாதுகாக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புலிகள் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் உயிர் தன்மையை கணக்கெடுக்கக்கூடிய சிறப்பான செயல் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

இந்தியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 159 புள்ளிகள் உயிரிழந்தனர்.  பெரும்பாலும் மத்திய பிரதேசத்தில் புலிகளின் உயிரிழப்பு என்பது அதிகமாக காணப்படுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.  தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் இதுவரை 75 புள்ளிகள் உயிரிழந்துள்ளனர்.  அதிகபட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் கடந்த ஆண்டு தான் 127 புள்ளிகள் கடந்த உயிரிழந்துள்ளன.

“நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும்” : இன்று சர்வதேச புலிகள் தினம் - சிறப்பு செய்தி தொகுப்பு!

கடந்த 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் புலிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூலை 29ஆம் தேதி ஆண்டுதோறும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. புலிகள் தான் வனத்தின் முக்கிய ஆதாரம் என்றும் உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது . அந்தவகையில் ஒரு நாட்டின் மிக முக்கிய பொருளாதாரத்தை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக புலிகள் இருந்து கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் , சர்வதேச புலி தின வாழ்த்துக்கள்.தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் அறிக்கையின்படி , இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 
264 புலிகளுடன் இந்தியாவின் 10% புலிகள் தமிழ்நாட்டில் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சியாக   இந்தாண்டு அக்டோபரில் சென்னையில் மத்திய அரசுடன் இணைந்துசர்வதேச புலிகள் கூட்டமைப்பு மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என குறிப்பிட்டிருக்கிறார்.