அண்ணாவின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 
stalin

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நினைவு இல்லத்தில் பார்வையிட்டார். 


இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், பெரியாரின் தம்பி - கலைஞரின் அண்ணன் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவர்களின் வழிகாட்டி, ‘தம்பி’ எனும் ஒற்றை சொல்லில் தி.மு.கழகம் எனும் கோட்டையை கட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாளான இன்று, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அண்ணா அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி, திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பேரறிஞர் அண்ணா வழியில் மாநில சுயாட்சி காக்க அயராது உழைப்போம்.