பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் மரியாதை

 
mk stalin

திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பேராசிரியர் அன்பழகன் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் அவர் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் அவருக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். 

mk stalin

இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல்மைச்சர் முக ஸ்டாலின் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனிடையே பேராசிரியர் அன்பழகனின் நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன். அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.