மொழிப்போர் தியாகிகள் தினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

 
stalin

சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

1965-ல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.