குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

 
stalin

மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில், மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜனின் கையை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.