அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 
stalin

சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார். 

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இதேபோல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.