முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் செல்கிறார் - பலத்த போலீஸ் பாதுகாப்பு

 
stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்திற்கு செல்லவுள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர், 3 காவல்துறை துணை தலைவர்கள், 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரம் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

drone camera

முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதனால் வேலூர் புதிய பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மெனவூர் இலங்கை அகதிகள் முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெரும் பள்ளிகொண்டா சத்தநேரி ஆகிய பகுதிகள் அனைத்திலும் நாளை இரவு வரை (No Flying, Zane) "ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்" பறக்க தடை செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.