2ஆம் கட்ட மகளிர் உரிமை தொகை - நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

 
stalin

2ஆம் கட்ட மகளிர்  உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் ரூ. 1000 வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.  11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.  

மகளிர் உரிமைத்தொகை - விண்ணப்பப் படிவம் வெளியீடு

இந்த நிலையில், 2ஆம் கட்ட மகளிர்  உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  சென்னை கலைவாணர் அரங்கில் இந்த விழாவானது நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சரியான நிலையில், முதல் நிகழ்ச்சியாக பங்கேற்கிறார். மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது.