ஹச் புனித பயணம் சென்னையிலிருந்து புறப்பட நடவடிக்கை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி..

 
ஸ்டாலின்


சென்னையை  ஹஜ் புனித யாத்திரை புறப்பாட்டு இடமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் நன்றி  தெரிவித்துள்ளார்.  

ஹஜ்

2023ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என  மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது.  இதனைனையடுத்து  சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள பரிசீலிப்பதாக  உறுதியளித்த அளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறுத்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

ஹஜ்

எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் ஹஜ் பயணத்திற்கான எம்பார்கேஷன் பாயிண்டாக சென்னை  இருப்பதை  உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புனித யாத்திரை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் நலனுக்காக  சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  அதனை ஏற்று தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அத்துடன்  கொரோனா காரணமாக  நடப்பாண்டு  சென்னைக்கு பதிலாக  எர்ணாகுளத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை புறப்படும் என்றும் மத்திய அமைச்சர்  முக்தார் அப்பாஸ் கூறியுள்ளார்.