’ஒமைக்ரான் புதிய அச்சுறுத்தலாக மிரட்டி வருகிறது’ - சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில்  தற்போது ஒமைக்ரான் மிரட்டத் தொடங்கொயிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகம் எடுத்திருக்கிறது. அதோடு, ஒமைக்ரான் வைரஸும்  தன் பங்கிற்கு  அச்சுறுத்தி வருகிறது. இதனால் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு  அனுமதியளித்திருக்கிறது. அதன்படி இன்று முதல் சிரார்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

மாணவர்களுக்கு தடுப்பூசி

 தமிழகத்தைப் பொறுத்தவரை 33 லட்சத்து 22 ஆயிரம் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் மட்டும் 26 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு தடுப்பூசி  செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.  ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

மாணவர்களுக்கு தடுப்பூசி

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,  தமிழகத்தில் பொருளாதாரம் மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒமைக்ரான் புதிய அச்சுறுத்தலோடு மிரட்டத் தொடங்கியுள்ளது  என்று கூறினார். மேலும் ஒமைக்ரானில் இருந்து நம்மை தடுக்கும் கேடயம் முகக்கவசம் என்பதால், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், கொரோனா அதிகரித்து வருவதால் மாணவ, மாணவிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.