திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிய ஏற்றத்தாழ்வுகள் - தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக போராடியவர் அம்பேத்கர். அம்பேத்கரின் பிறந்தநாளை, சமத்துவ நாளாக திராவிட மாடல் அரசு கொண்டாடி வருகிறது. நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமானவர் எம்.சி.ராஜாச. மூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு. எம்.சி.ராஜா விடுதி கட்டட முகப்பில், எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை வைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் முன்னேற்றம் இதயத்துடிப்பு மாதிரி விடியல் பயணத்தில் அதிகம் பயனுடைய கூடியவர்கள் ஆதிதிராவிடர்கள். கல்வி, வேலை, அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என எல்லாமே ஜனநாயகமாக மாறிவிட்டது.