கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருவோம் என்றும் கூறுகிறார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 
stalin

7-வது முறையாக திமுக தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 51 பொறுப்பாளர்கள் உட்பட 3,000 மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மண்டல செயலாளர் - 1, மாவட்ட செயலாளர்கள் - 8, ஒன்றிய செயலாளர்கள் - 5, சார்பு அணி நிர்வாகிகள் - 9, தொகுதி செயலாளர்கள் - 6, 
முன்னாள் எம் பி வேட்பாளர்கள் - 3, முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் - 6 என 51 பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருவோம் என்றும் கூறுகிறார்கள். வேஷமிடுபவர்கள், நாடகம் நடத்துபவர்கள் பற்றி பேச விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. தமிழ்நாட்டு ஆளுநரின் செயல்பாடு சரியில்லைதிமுக என்பது ஏதோ நேற்று முளைத்த காளான் அல்ல. 7-வது முறையாக திமுக தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என கூறினார்.