"எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம்" - முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

 
stalin

தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பதிலுரை ஆட்சி வருகிறார். அதேபோல் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். விதி 110ன்  கீழ் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை குறைக்கும் மசோதாவை,  சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த நிலையில், சட்ட திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிகாலம் 5 லிருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

stalin

இந்நிலையில்  சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி. எதிர்கால தமிழகம் எல்லா வகையிலும் உயர்வடைய நாம் உறுதியேற்க வேண்டும். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்பட வில்லை" என்றார் .

ttn

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம். அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். இன்று வரை அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நிச்சயம் இருப்பேன். இதில்  எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது" என்று கூறிய முதல்வர், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் .இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" என்றும் விளக்கமளித்தார்.