தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுவது இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள திட்டங்களை மத்திய அரசின் உதவி இல்லாமல் செய்கிறோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் பல்வேறு துறைகள் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேயர் சிட்டிபாபு பூங்காவில் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள திட்டங்களை மத்திய அரசின் உதவி இல்லாமல் செய்கிறோம். மாநில அரசை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும். காலம் கனிந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கூறினார்.