மாநிலத்தின் வளர்ச்சியை உணர்த்துவது கட்டடம் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 
stalin

தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நகர வளர்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற CREDAI கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  பொருளாதாரம், தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நகர வளர்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும். சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் உலக தரத்தில் பொருட்காட்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கைகளை கிரெடாய் நிறைவேற்ற வேண்டும். 

கோவை, மதுரை, ஓசூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 136 நகரங்களுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரைக்கான முழுமை திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும். சென்னையை சுற்றியுள்ள மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், பரந்தூர் பகுதிகளுக்கு புதுநகர வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.