இபிஎஸ் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
stalin

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது: இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் அடிமைகள் அல்ல நாங்கள்.  இது பணப் பிரச்னை அல்ல, இனப் பிரச்னை. மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இருமொழி கொள்கை மட்டுமல்ல, நமது வழிக் கொள்கையும் விழிக் கொள்கையும் இதுதான்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

இபிஎஸ் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருப்பதாக செய்தி வருத்திருக்கிறது. டெல்லியில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.