தொகுதி மறுவரையறை விவகாரம்...தமிழக எம்.பிக்கள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் - முதலமைச்சர் பேச்சு

தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது. மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது. தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி.
தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து நியாயமான தொகுதி மறுசீரமைப்பினை பெற்றிட நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச்சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்திக்கவுள்ளோம்.
— DMK (@arivalayam) March 24, 2025
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்… pic.twitter.com/8PsZmzuUpu
நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழ்நாடு எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து நியாயமான தொகுதி மறுசீரமைப்பினை பெற்றிட நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச்சென்று மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்திக்கவுள்ளோம் என கூறினார்.