தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பாதிப்பு - முதலமைச்சர் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அபாயகரமான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ள மாநிலங்களுக்கு தண்டனையாக அமையும். 2ஆவது முறைப்படி, தொகுதிகளை உயர்த்தினாலும் தமிழ்நாட்டிற்கு 22க்கு பதிலாக 10தான் கிடைக்கும். ஒன்றிய அரசு 2026ல் மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும். நாடாளுமன்ற தொகுதி 848ஆக உயர்த்தப்படக்கூடும். தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அபாயகரமான செயல். தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.