கச்சத்தீவை மீட்பது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்!

 
cm mk stalin

கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை. முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது  என கூறினார்.