ஏழை, எளிய மக்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

சாதாரண, சாமானிய, நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பாக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இடைக்கால் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: ஆட்சிக்காலம் முடிய போகிறது என்ற அலட்சியமே இடைக்கால பட்ஜெட்டில் தெரிகிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே. சாதாரண, சாமானிய, நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் பட்ஜெட்டில் இல்லை. 

stalin

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம். தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ ₹20 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. மொத்தத்தில் ஏதுமற்ற அறிக்கையை வாசித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என குறிப்பிட்டுள்ளார்.