மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுசூரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறுசூரமைப்பு தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். இதற்காக 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு. மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 39ல் இருந்து 31 ஆக குறையும். 8 நாடாளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என கூறினார்.