பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை இல்லை - முதலமைச்சர் ஆவேசம்!

பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடசென்னை ஒராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும். எல்லா பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்புதான் சேர்க்கிறது. அவர் அப்படியே செயல்படட்டும். பெரியார் மீது மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் தான் எங்களுடைய தலைவர். தலைவர்களுக்கெல்லாம் தலைவர். பெரியார் குறித்த நீண்ட விமர்சனத்தை பொருள்படுத்த தயாராக இல்லை என கூறினார்.
சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. ஓராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசுக்கு எதிராகவே செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு சிறப்பு சேர்ப்பதால், அவர் அப்படியே நடந்து கொள்ளட்டும். பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என கூறினார்.