திராவிட மாடலுக்கு பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீதி கட்சி உருவான நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி, இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி, இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய #DravidianModel-க்குப் பாதை அமைத்த நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
🔥 வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எனும் உரிமையை வழங்கிச் சமூகநீதிப் புரட்சி,
— M.K.Stalin (@mkstalin) November 20, 2024
🔥 இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் காலை உணவுத் திட்டத்தை முன்னோடியாகத் தொடங்கிக் கல்விப் புரட்சி,
🔥 இந்து சமய அறநிலையச் சட்டம் மூலம் சமத்துவப் புரட்சி
- என நூறாண்டுகளுக்கு முன்பே இன்றைய… pic.twitter.com/qFp09PE7GA
உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாய்ப் பிறந்த #JusticeParty-இன் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் உழைப்பைச் செலுத்திடுவோம்! வென்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.