ஆரியப்பண்பாட்டை திணிக்க இங்கு இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Feb 27, 2025, 10:57 IST1740634065901

ஆரியப்பண்பாட்டை திணிக்க முயன்றால், தமிழ் மண்ணில் இடம் கிடையாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமஸ்கிருதம், இந்தி மூலம் ஆரியப்பண்பாட்டை திணிக்க முயன்றால், தமிழ் மண்ணில் இடம் கிடையாது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி இந்தி "ஆரியப்பண்பாட்டை திணிக்க இங்கு இடமில்லை. இந்தி, சமஸ்கிருத மொழிகளின் படையெடுப்பால் வடமாநிலங்களில் சுமார் 25 மொழிகள் அழிந்துள்ளன.
வடமாநிலங்களில் அந்த மண்ணின் தாய்மொழிகளை இந்தியும், சமஸ்கிருதமும் சிதைக்கின்றன. இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களில், அதன் பூர்வீக மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில், தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி தாய்மொழியை அழிக்கும் முயற்சியாக தேசிய கல்விக்கொள்கை இருப்பதால்தான் எதிர்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.