எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
Feb 21, 2025, 08:19 IST1740106161512

தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் பெரிதாகி வரும் நிலையில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம். அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி. உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என குறிப்பிட்டுள்ளார்.