முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
Mar 4, 2025, 08:19 IST1741056557932

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீர் முச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தயாளு அம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தயாளு அம்மாளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.