"மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நேரடி விமான சேவை தேவை" - முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

 
stalin

மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு இடையே தற்காலிக விமான போக்குவரத்து உடன்படிக்கை செய்ய கோரி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

domestic flights

அதில், ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில் , குறிப்பிட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், துபாய், தோகா மற்றும் கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

stalin

 அதன் காரணமாக பல்வேறு இன்னல்கள் உடன் அதிகமான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி,  அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை தீர்ப்பதற்காக , விமான சேவைகளை வழங்க ஏதுவாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் கொரோனா கால தற்காலிகமான விமான போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.