கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்!
Jan 23, 2025, 11:44 IST1737612892285

கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்து
தான் இரும்பின் தொன்மை தொடங்கியது.
5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்திய தமிழர்கள். கீழடியில் கிடைத்த இரும்பு பொருட்கள் கதிரியக்க கால கணக்கெடுப்பு முடிவின்படி கி.மு 3345 தொன்மையானது. கி.மு 3,345 தமிழகத்தில் இரும்பு அறிமுகமாகியுள்ளது. "5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியது தமிழர்கள் தான். இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என கூறினார்.