காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
mk stalin

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தமிழக அரசு சார்பில் தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். தனது முதல்கட்ட கள ஆய்வை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் தொடங்கினார். அங்கு பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்தார். இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதேபோல் இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய காலணி ஆலை மூலம் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வின் ஒரு பகுதியாக காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.