"யாரிடமும் சொல்லாமல்... முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்" - பரபரப்பான ரேஷன் கடை; திடுக்கிட்ட ஊழியர்கள்!

 
ஸ்டாலின் ஆய்வு

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு அனைத்து மக்களுக்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கி வருகிறது. கரும்புடன் இணைந்த 21 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை ஜன.4ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. பணம் கொடுக்காவிட்டாலும் பொருட்கள் அனைத்தும் தரமாக இருக்கிறது என பலரும் மகிழ்ச்சியாகக் கூறினர். ஆனால் சில தினங்களாக தரமற்ற பொருட்களை வழங்குவதாக வீடியோக்களும் செய்திகளும் இணையத்தில் வலம் வருகின்றன.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ரேசன் கடையில் திடீரென ஆய்வு: செய்த முதல்வர்  மு.க.ஸ்டாலின்

இது முதலமைச்சர் ஸ்டாலின் காதுகளுக்கும் எட்டியது. அனைத்தும் சரியாக செய்தும் ஏன் இப்படி தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ரெய்டு விட்டுள்ளார். உள்ளபடியே பரவும் தகவல்கள் உண்மை தானா என கண்டறியவும் உத்தரவிட்டிருக்கிறார். விஷமத்தனமான கருத்துகளை சிலர் பரப்புவதாகக் கூறிய அவர்,  தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்ய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். 

பொங்கல் பரிசு தொகுப்பு.. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு! | Bhoomitoday

மேலும் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட ஆட்சியர்களும் ஆணையிட்டார். இச்சூழலில் இன்று நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார். ஆம் சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ரேஷன் கடை ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்படக் கூடிய பொருட்கள் எதுவும் குறையாமல் சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா, தரமானதாக வழங்கப்படுகிறதா என மக்களிடம் கேட்டார். மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் போட்டுவிட்டார். மேலும் ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்த முதலமைச்சர், தரமானதாகவும் எதுவும் விடுபடாமலும் பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.