கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்து வைத்து, திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணி மற்றும் 20 மறுசீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (12.9.2023) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இன்று தான்தோன்றி அம்மன் கோயில் தெருவில் 11 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்து வைத்து, 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் புனரமைக்கும் பணி மற்றும் கொளத்தூர் பகுதியில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 20 மறுசீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.


கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. கோயில் (வடக்கு) பகுதியில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 6 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர்கள் அறைகள், முதலுதவி அறை, பயணிகள் காத்திருக்கும் அறை, கடைகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ள திரு.வி.க. நகர் பேருந்து நிலையப் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், தான்தோன்றி அம்மன் கோவில் தெருவில். மூலதன நிதியின் கீழ், 11 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் நடைபாதை வசதி, பசுமை புல்வெளி, நீரூற்றுக்கு 20 HP மோட்டார், பெஞ்சுகள், மின் வசதிகள் உள்ளிட்ட புனரமைக்கப்பட்டுள்ள ஆனந்தன் பூங்காவை பல்வேறு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்