சூரிய மின்கல உற்பத்தி ஆலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 
stalin

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், டாடா சூரிய மின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நெல்லை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள சிப்காட்டில் டாடா பவர் சூரிய மின்கலன் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

கங்கைகொண்டானில் நாட்டின் மிகப்பெரிய 4.3 GW சூரிய மின்கலன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.4,400 கோடியில் அமைந்துள்ள சூரிய மின்கலன் ஆலையால் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.