உதகை மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
stalin stalin

உதகையில் 127ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோடை விடுமுறையை ஒட்டி உதகையில் மலர் கண்காட்சி 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், உதகையில் 127ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்.  

இதனை தொடர்ந்து உதகை கண்காட்சியில் மலர் சிம்மாசனத்தில் மனைவி துர்காவுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அமைச்சர்கள் சிலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தனர். தாவரவியல் பூங்காவில் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் அலங்காரங்களை பார்வையிட்டார்.