1,046 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ரூ.659.96 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை, செங்கல்பட்டு, திருச்சியில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை செனாய் நகரில் ரூ.131.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
சென்னை கே.கே நகரில் ரூ.51.29 கோடியில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். செங்கல்பட்டு இராஜகுளிப்பேட்டையில் ரூ.43.81 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை திறந்து வைத்தார். மொத்தமாக ரூ.659.96 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.