ரூ.515 கோடியில் கோத்ரேஜ் உற்பத்தி ஆலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 
stalin

ரூ.515 கோடியில் கோத்ரேஜ் உற்பத்தி ஆலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல, சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோத்ரேஜ் நிறுவன ஆலையால் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதலீடு செய்வதில் உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி. திராவிட மாடல் ஆட்சிக்கு கோத்ரேஜ் நிறுவனத்தின் ஆலை திறப்பும்  எடுத்துக்காட்டு. கோத்ரேஜ் நிறுவனத்தின் ஆலையால் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் வரை அரசு கவனத்துடன் இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரம் தமிழ்நாடு. 50% பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு பணி வழங்குவதை நான் பாராட்டுகிறேன். தமிழகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல, சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சி. வளர்ச்சி என்பது சீரான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என கூறினார்.