தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது. "காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் முயற்சியாக நடைபெறும் மாநாடு"காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம். காலநிலை கல்வி அறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக நாம் மாற வேண்டும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேளாண், நீர்வளத்துறைக்கு பயிற்சி அளிக்கப்படும். காலநிலை கொள்கை தொகுத்து வெளியிடப்படும்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இந்தியாவிலேயே காலநிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான் என கூறினார்.