பொங்கல் பரிசு தொகுப்பு - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
mk stalin

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கரும்பு, வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் பொங்கல் பரிசுடன் ரொக்கமாக பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமாக பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.  1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.  இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது.  இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்