1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52 இடங்களிலும் , கடலூரில் 49 இடங்களிலும் , கோவையில் 42 இடங்களிலும் , தஞ்சையில் 40 இடங்களிலும் உள்ளிட்ட 1000 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. சந்தை விலையை விட இங்கு 75% தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.