கேல் ரத்னா விருதுக்கு தேர்வான குகேஷ் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
stalin

நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி! கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ் மற்றும் அர்ஜுனா விருது பெற்றுள்ள துளசி மதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ், அபேசிங் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!


தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.