2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் வழங்கினார்!

 
stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

சென்னையில் இன்று 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 2,642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மக்களின் உயிர் காக்கும் சேவை பணிக்கு ஆணை வழங்க என்னை அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  மக்களை புரிந்து கொள்ளும் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும். உலகளவில் பாராட்டத்தக்க வகையில் மருத்துவ கட்டமைப்பை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தியுள்ளது. 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும். மருத்துவர்கள் செய்ய கூடியது, மக்களின் உயிர் காக்கும் பணி. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும். மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள், உங்கள் நலனை அரசு கவனிக்கும். திராவிட மாடல் அரசு என்பது மக்களுக்கான அரசு என கூறினார்.