மருத்துவத் துறை சார்பில் 147 புதிய வாகனங்கள் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 
stalin

மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் இதர வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 108 அவசர கால ஊர்திகள், மலை, நிலப்பரப்புக்கான அவசர கால ஊர்தி சேவை, இலவச அமரர் ஊர்திகள், தாய்சேய் நல ஊர்திகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 ஊர்திகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

30.28 கோடியிலான ஆம்புலன்ஸ் உட்பட  147 புதிய வாகனங்களின் சேவையை  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.