மத்திய அரசின் பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது - மு.க.ஸ்டாலின்

 
stalin

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் - வெற்றுப்பயணங்களே! பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா? நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?


ஜல்ஜீவன், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா? பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.