தமிழக பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை

 
stalin

ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய விவரங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளதாலும், அதனைத் தொடர்ந்து நிதி நிலை அறிக்கை 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாலும், ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய விவரங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவை குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா.முருகானந்தம் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.