புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
வங்க கடலில் புயல் உருவாகவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
வங்க கடலில் நாளை ஃபெங்கல் புயல் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. ஃபெங்கல் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழகத்தை நோக்கி நகரும் எனவும், சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாளையுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்களுடன் காணொலியில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். புயல், மழையை எதிரிகொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.