நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு

 
MK Stalin

திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சரும், திமுக த் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய கட்சிகளாக விளங்கும், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர். திமுக சார்பில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்களுடன் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில் ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனை கூட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக கட்சியில் நியமிக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு நிர்வாகிகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டும். தி.மு.க. அரசு செய்துள்ள சாதனைகளை, திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும். வெற்றியே நமது குறிக்கோள் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்த வார்டு வாரியாக கூட்டங்களையும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.