சிறப்பு பாதுகாப்பு படையின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல்நிலைக்குறைவு காரண்மாக உயிரழந்த நிலையில், அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல்நிலைக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்
— TN DIPR (@TNDIPRNEWS) September 7, 2023
இரங்கல் செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/TsgCeKKRPC
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG) இயக்குநர் திரு. அருண் குமார் சின்ஹா அவர்கள் உடல்நிலைக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.