இந்தியில் எல்.ஐ.சி. இணையதளம்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 
stalin

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் "பாஷா" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் வாடிக்கையாளர்களும் இந்தி தெரியாமல் குழப்பம் அடைந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தி திணிப்புக்கான பரப்புரை கருவியாக LIC இணையதளம் மாற்றப்பட்டுள்ளது. இந்தி மொழிக் கொடுங்கோன்மையை உடனே திரும்பப் பெற வேண்டும். இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை மிதித்து பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு  என குறிப்பிட்டுள்ளார்.