குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 
Stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

Stalin

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்ட்டாடி மகிழ்ந்தார். குடும்பத்தினருடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்ட்டாடினார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, மகள் மற்றும் மருமகன் சபரிசன் மற்றும் பேர குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடினார்.